பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
மதுரை: மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான
புலவர் மீ.கந்தசாமி நினைவு ஏழிளந் தமிழ் எழுத்து போட்டி நடக்கிறது. முதல் வகுப்பு - ஆத்திச்சூடி, இரண்டாம் வகுப்பு - கொன்றைவேந்தன், மூன்றாம் வகுப்பு - வெற்றிவேற்கை, நான்காம் வகுப்பு - மூதுரை, ஐந்தாம் வகுப்பு - நல்வழி ஆகிய தலைப்புகளில் ஜன., 28 காலை 9:00 முதல் 10:00 மணி வரை மற்றும் ஆறாம் வகுப்பு - உலகநீதி, ஏழாம் வகுப்பு - நன்னெறி, எட்டாம் வகுப்பு - திருக்குறள் (அறத்துப்பால்) ஆகிய தலைப்புகளில் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது. மாணவர்கள் தங்களுக்கான தலைப்புக்கு உரிய நூலை நன்கு பயில வேண்டும்.
போட்டி நாளன்று தங்களுக்கு தெரிந்த மனப்பாட செய்யுள்களை பிழையின்றி, அழகாக
குறித்த நேரத்தில் எழுத வேண்டும். எழுதுவதற்கு தாளும், பேனா, பென்சில் கொண்டு வர
வேண்டும். சிறப்பாக எழுதும் ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று பரிசுகள், ஊக்கப்பரிசுகள் புலவர் வ.சுப.மாணிக்கனாரின் நினைவு நாளான மார்ச் 4ல் வழங்கப்படும். பங்கு பெற விரும்பு வோர் ஆசிரியர் கையெழுத்துடன் விண்ணப்பக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் இருந்து 20 பேர் வரை கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 94422 87369.