பதிவு செய்த நாள்
01
ஜன
2018
10:01
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் உட்பட, தமிழகம் முழுவதும், பல கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடைபெற்றது.
புத்தாண்டையொட்டி உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் விபூதி அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார். திருவள்ளுர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுந்தர விநாயகர் கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு கோயில் முழுவதும் பழங்கள் முலயை அமைக்கபட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. புத்தாண்டை முன்னிட்டு ஆறு படைவிடு ஐந்தாம் படைவிடனா திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோயிலில் டிவியில் உற்சவர் சுப்பிரமணி சுவாமி வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டவாசிகள், புத்தாண்டை உற்சாகமாகக் கொண்டாடினர். கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பட்டாசு வெடித்துஆங்கிலப் புத்தாண்டு தினத்தை ஒட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, நேற்று முன்தினம் இரவு முதல் நடந்தன. நகர வீதிகளில், நள்ளிரவு, 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இளைஞர்கள் கொண்டாடினர். ஒருவருக்கொருவர், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.