ஒரு நல்லது நடக்க அல்லது ஒருவரை ஆபத்திலிருந்து காப்பாற்ற சொல்லப்படும் பொய் பாவமாகாது. ‘பொய்மையும் வாய்மையிடத்து’ என வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தவறான காரியங்களுக்காக சொல்லப்படும் பொய் பாவமாகும். இதற்கு பிராயச்சித்தம் இல்லை. இதற்கெல்லாம் பாவமன்னிப்பு தந்தால் அது தீயவர்களை ஊக்குவிப்பதாகி விடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவி செய்தால், ஆறுதல் கிடைக்கும்.