Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் ஒரு திருக்கயிலை: நவ ... தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம் தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாங்கூரில் சமூக விரோதிகளால் சீரழிக்கப்படும் கோயில் குளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
05:01

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ்பெற்ற திருமணிமாடக்கோயில் என்றழைக்கப்படும் ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் 11 கருட சேவை உற்சவமும், சித்திரை மாதம் பிரம்மோற்சவமும் நடைபெறுவது வழக்கம். இக்கோயிலின் எதிரே இந்திர புஷ்கரணி தீர்த்த குளம் உள்ளது.

Default Image
Next News

இந்த தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் தோஷங்கள் நீங்கி, ராஜயோகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்திர புஷ்கரணியில் சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது தெப்பத் திருவிழா நடத்தப்படும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தக்குளம் கடந்த சில ஆண்டுகளாக இந்து சமய அறநிலையத் துறையினரின் அலட்சியத்தால் பராமறிப்பின்றி தீர்த்தக் குளத்தின் கரைகளில் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மேலும் இந்த குளத்தின் அருகே 2016-– 17ம் ஆண்டுக்கான மயிலாடுதுறை தொகுதி எம்பி பாரதிமோகன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 3.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு இ ன்று வரை செயல்பாட்டிற்கு வரவில்லை. அதனால் அப்பகுதி மூழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் பலர் குளத்தின் படித் துறைகளில் அமர்ந்து மது அறுந்துவதுடன், பாட்டில்களை உடைத்து படித்துரைகளிலும், குளத்தின் உள்ளேயும் வீசி விட்டு செல்கின்றனர். மேலும் பலர் இந்த குளத்தில் குப்பைகளைக் கொட்டுவதால் பக்தர்கள் நீராடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குளம் மூழுவதும் பாட்டில்கள் உடைந்து கிடப்பதால் பக்தர்கள் தண்ணீரில் இறங்கி நீராடமுடியாமல் தவிக்கின்றனர். இ ந்நிலையில் வரும் 18ம் தேதி எங்கும் கானக்கிடைக்காத 11 பெருமாள்களின் கருடசேவை உற்சவம் இந்த கோயிலில் நடைபெற உள்ளது. உற்சவத்தில் கலந்துகொண்டு 11 பெருமாள்க ளையும் சேவிக்க பல லட்சம் பக்தர்கள் நாங்கூர் வரவுள்ளனர். எனவே 18ம் தேதிக்கு முன்பாக இந்து சமய அறநிலையத்துறை தீர்த்த குளத்தை சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பிட நடவடி க்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்ககை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar