பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அண்ணா மலையார் கோவிலில் மார்கழி திருவாதிரை விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை, 4:30 மணிக்கு தில்லை கூத்தப்பெருமானுக்கு திருமுழுக்கு நடந்தது. 5:00 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருக்காட்சி தரிசனத்தை தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. பின்னர், திருவெம்பாவை வழிபாடுகளுடன், மாணிக்கவாசகர் - சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர், மண்டபத்தில் எழுந்தருளினார். காலை, 9:00 மணிக்கு சிவகாமியம்மை உடனமர் தில்லை அம்பலவாணர், உற்சவர் திருவீதி உலா, அண்ணாமலையார் கோவிலில் துவங்கியது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, மதியம் கோவிலை அடைந்தது. திருவீதி உலாவில், அறுபத்துமூவர் மகளிர் அணியினரின் கோலாட்ட நிகழ்ச்சி நடந்தது. நாளை மாலை, 6:00 மணிக்கு அண்ணாமலையார் கோவில் திடலில், அறுபத்துமூவர் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது.