பதிவு செய்த நாள்
04
ஜன
2018
12:01
திருவண்ணாமலை, திருவண்ணாமலையில், ரமணரின், 138வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவண்ணாமலையில், கிரிவலப்பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில், ரமணரின், 138வது ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் விஷ்ணு சகஸ்ரநாமம், நடராஜர் அபிஷேகம், திருவெம்பாவை பாராயணம், வேத பாராயணம் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மங்கள இசையுடன் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ருத்ரஜெபம் மற்றும் ரமணர் மஹாலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, மங்கள ஆரத்தி நடந்தன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.விழாவில், திரைப்பட இசை அமைப்பாளர் இளையராஜா, ரமணர் கீர்த்தனைகளை பாடினார்.