பதிவு செய்த நாள்
06
ஜன
2018
12:01
கோத்தகிரி: கோத்தகிரி காத்துகுளி மடிமனையில், பேரகணி ெஹத்தையம்மனுக்கு நடந்த அழைப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமான ெஹத்தையம்மன் திருவிழா, 1ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கிராமத்தில் உள்ள கோவிலில் இருந்து, செங்கோல் பக்தர்கள் வண்ணக்குடைகளின் கீழ், ெஹத்தையம்மனை மடிமனைக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அங்கு ஒருவாரம் விரதம் இருக்கும் பக்தர்கள், நாளை (ஞாயிறு) அம்மனை மீண்டும்மடிமனையில் இருந்து, கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அழைத்து செல்கின்றனர். மடிமனையில், ஒருவாரம் அருள்வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது. ெஹத்தையம்மன் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, கேர்பெட்டா, ஆலுகேருஹண்ணி சுத்தக்கல்லில் விழா நடந்தது. புதன் கிழமை, பேரகணியிலும், நேற்று காத்துகுளியிலும் விழா நடந்தது.
அப்போது, ெஹத்தையம்மனுக்கு, பெத்தளா பக்தர்கள் சார்பில், நட்டக்கல் சுத்தக்கல்லில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டனர். மாலை,5:00 மணிக்கு, காத்துகுளி மடிமைனயில் இருந்து, பேரகணி ெஹத்தையம்மன் மீண்டும் மடிமனைக்கு ஊர்வலமாக அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று, சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையில் திருவிழா நடக்கிறது. இவ்விழாவிலும், அம்மன் அருள்வாக்கு, அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.