பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
திருப்பூர் :சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தைப்பூசத்தேர்த்திருவிழா, வரும், 22ல் துவங்கி, பிப்., 9 வரை நடக்கிறது.தேரோட்டம், வரும், 31ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.காங்கயம் அருகே சிவன்மலையில், சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, தைப்பூசத்தேர்த்திருவிழா, வரும், 22ம் தேதி துவங்குகிறது. அன்றிரவு, 9:00 மணிக்கு, வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றம்; வரும், 23ல், வீரகாளியம்மன் திருவீதி உலா; வரும், 24ல், தேர்த்திருவிழா மற்றும் கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 25ம் தேதி, கொடியேற்றம் நடக் கிறது. தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 26ம் தேதி முதல், தினமும் சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. வரும், 30ம் தேதி மாலை, 7:00க்கு, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 31ம் தேதி, அதிகாலை, 3:30 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. சந்திரகிரகணம் காரணமாக, தைப்பூச தினத்தன்று, காலையிலேயே தேரோட்டம் நடக்கிறது. காலை, 10:00 திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மற்றும் முதல் நாள் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,1,2ம் தேதிகளில், தேரோட்டம் நடக்கிறது. 5ம் தேதி பரிவேட்டை, தெப்ப உற்சவம்; 6ம் தேதி மகா தரிசனம் நடக்கிறது.வரம், 9ல், மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி திருமலையில் எழுந்தருளல், கொடி இறக்குதல் நடக்கிறது.