பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
பொள்ளாச்சி;கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கோவிலில் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா, 16ம் தேதி காலை,8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 29ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மயான பூஜையும், 30ம் தேதி காலை, 7:30 மணிக்கு சக்தி கும்பஸ்தானம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு குண்டம் கட்டுதல், இரவு, 9:00 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல்; இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பிப்., 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு, முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நடக்கிறது. 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில், ஆன்மிகச் சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.