Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மானாமதுரை அம்மன் கோயிலில் ... வத்திராயிருப்பில் கோட்டப்பிரதஷ்டமி விழா வத்திராயிருப்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

10 ஜன
2018
11:01

பழநி, திண்டுக்கல் அருகே பாடியூரில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன்கோயில், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழநி யாண்டவர் கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் அசோகன், மனோகரன், ஸ்ரீராஜா, ஆய்வுமாணவர்கள் வீரகருப்பையா, சேரல்பொழிலன் ஆகியோர் திண்டுக்கல் அருகேயுள்ள பாடியூரில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டனர். பாடியூர் கிழக்கே, எழுத்துப்பாறை எனப்படும் இடத்தில் ஆய்வு செய்தனர். அதில் கி.பி.,13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சுந்தரபாண்டியர் காலத்திய கல்வெட்டு உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான அப்பகுதியில் இருந்த சிவன்கோயில், அதற்கு வழங்கிய கொடை விபரங்கள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாராயணமூர்த்தி கூறியதாவது: கல்வெட்டு முழுமையாக படிக்கமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளது. இக்கல்வெட்டு மூலம், அழிந்த சிவன்கோயிலில் கணக்கு எழுதுபவர் பெயர் கூத்தாண்டானான தென்னவன் என்று தெரிகிறது. வேளாண் கூத்தன், படிபுத்திரன் என பாடியூரைச் சேர்ந்த பலரது பெயர்கள் உள்ளன. அவற்றை முழுமையாக படிக்க முடியாத அளவிற்கு அழிந்துள்ளன. சிவன் கோயிலுக்கு சிலர் நிலத்தை கொடையாக அளித்தும் அதற்கு, கடமை, குடிமை போன்ற வரிகள் நீக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது.கோயில் இருந்ததற்கு அடையாளமாக திரிசூலம் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. நந்தி சிலையும் உள்ளது. மரம், செங்கலால் கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சிதிலங்கள் உள்ளது. இதனால் கோயிலில் கல்வெட்டை பொறிக்காமல், அருகே பாறையில் எழுதியுள்ளனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar