பதிவு செய்த நாள்
11
ஜன
2018
12:01
தளவாய்பட்டி: சேலம், தளவாய்பட்டி, அரசு இசைப்பள்ளியில், முதல் முறையாக நடந்த மார்கழி இசை விழா, நேற்று நடந்தது. கலெக்டர் ரோகிணி தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழக கலை பண்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் மட்டும், இசை விழா நடந்து வந்தது. நடப்பாண்டு, தமிழகத்தில் உள்ள ஏழு மண்டலங்களில் நடத்த உத்தரவிட்டுள்ளது. முதலில், திருச்சி மண்டலம், ஸ்ரீரங்கத்தில் நடந்தது. தற்போது, இங்கு நடக்கிறது. வரும், 13க்குள், மற்ற மண்டலங்களில் நடக்கும். இசைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், நலிந்த கலைஞர்கள், அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சென்னை, சக்கரவர்த்தி, மிருணாளினி நாட்டியக்கலைஞர்களின், குச்சுப்புடி நடனம், திருவாதவூர் குமார ராமச்சந்திரன் குழுவினரின் தேவார இசை, ராஜேஸ்வரி குழுவினரின் வாய்ப்பாட்டு, சீனிவாசன், கார்த்திகேயன், முத்துக்குமாரசாமி, செல்வகணபதி குழுவினரின் நாதஸ்வர இசை ஆகியவை நடந்தது.