அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி -திருநகரம் சாலியர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், தை பொங்கலை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிேஷகங்கள் நடந்தன. அம்மனுக்கு கரும்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அருப்புக்கோட்டை சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.