மானாமதுரை: மானாமதுரை பழைய காளையார்கோவில் ரஸ்தாவில் உள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் 17 ம் ஆண்டு மகரசங்கராந்தி,முளைப்பாரி உற்ஸவவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 7 ந் தேதி காலை 8:30 மணிக்கு நம்பி நாகம்மாளுக்கு காப்புகட்டும் வைபவம் நடந்தது.இதனையடுத்து நேற்று காலை பக்தர்கள் வைகை ஆற்றுக்கு சென்று தீச்சட்டிகள், சந்தனக்குடம்,பால்குடம் ஆகியவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர்.பின்னர் அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.இன்று திங்கள் கிழமை மதியம் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று அலங்கார குளத்தில் கரைக்க உள்ளனர்.16ந்தேதி அம்மனுக்கு லலிதா சகஸ்ர நாமம்,சாந்தி துர்க்கா,108 சங்காபிேஷகம் ஆகியவை நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோவில் பூஜாரி ரவிச்சந்திரன் செய்திருந்தார்.