பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
ஆட்டையாம்பட்டி: தை அமாவாசையை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, ஏராளமான பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்து, அம்மனுக்கு அபி?ஷகம் செய்தனர். மூலவர் அம்மன், நாகாபரணம் தரித்து, சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், பொங்கல் வைத்தும், முடி காணிக்கை செலுத்தியும், பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். அதேபோல், வீரபாண்டி அங்காளம்மன் கோவிலில், அம்மனுக்கு புதுப்புடவை சார்த்தி, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபாடு செய்தனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தளவாய்ப்பட்டி, வேணுகோபால சுவாமி கோவிலில், தேரோட்டம் நடந்தது. கோவில் வளாகத்தைச் சுற்றி, ஏராளமான பக்தர்கள், வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர்.