பதிவு செய்த நாள்
17
ஜன
2018
01:01
சேலம்: சுகவனேஸ்வரர் கோவிலில், முன்னோர்க்கு தர்ப்பணம் வைத்து, ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். உத்தராயண புண்ய கால துவக்கமான, தை மாதத்தில் வரும் அமாவாசையன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் வைத்து, வழிபாடு நடத்துவது சிறப்பு. நேற்று, தை அமாவசையை முன்னிட்டு, சேலம், சுகவனேஸ்வரர் கோவில் நந்தவனத்தில், அதிகாலை முதலே, ஏராளமானோர், தங்கள் பித்ருக்களுக்கு, பிண்டம் வைத்து, வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, பசு மாட்டுக்கு அகத்திக்கீரை, எளியவர்களுக்கு வஸ்திர தானம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர். இதையொட்டி, சுகவனேஸ்வரர், சொர்ணாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்கள், நீர்நிலைகள், ஏரி உள்ளிட்ட இடங்களில், பித்ரு வழிபாடு நடத்தினர்.