Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விவேகானந்தர் ஜெயந்தி ரத யாத்திரை வடலூர் தைப்பூச பாதயாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
12:01

பழநி: தைப்பூச விழா,, சபரிமலை ஐயப்பன் சீசன் காரணமாக பழநிக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பெயரளவில் மட்டுமே உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு சபரிமலைசீசன் மற்றும் தைப்பூச விழா வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் வருகின்றனர். மார்கழி என்பதால் அதிகாலை 4:00 மணிக்கே மலைக்கோயில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் ஸ்டேஷன், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மிகவும் குறைவாகத்தான் உள்ளது. தனியார் கட்டண குளியலுக்கு ரூ.20 முதல் 30 வரை கூடுதலாக கட்டணம் வசூல் செய்கின்றனர்.

மலைக்கோயில் செல்லும் பக்தர்களை திரு ஆவினன்குடி அருகே வழிமறித்து, கோயிலுக்கு அழைத்து செல்ல இடைத்தரகர்கள் பேரம் பேசுகின்றனர். தேங்காய்,பழங்கள், பேன்ஸி பொருட்கள், பொம்மைகள் அனைத்தும் 50 சதவிதம் கூடுதலாக விலைக்கு விற்கின்றனர். தைப்பூச விழா 10 நாட்களுக்கு மட்டும் அடிப்படை வசதிகளை நகராட்சி, கோயில் நிர்வாகம் செய்து தருகின்றன. தற்போது வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. ஆகையால் இனிவரும் பொங்கல் விடுமுறையில் முன்னிட்டு குவியும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறைவசதிகள் செய்து தர வேண்டும். நகராட்சி கட்டணகழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு கலெக்டர் வினய் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar