பதிவு செய்த நாள்
19
ஜன
2018
12:01
கருமத்தம்பட்டி: சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில், 155வது சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி இளைஞர் எழுச்சி ரத யாத்திரை நடந்தது.ஊத்துப்பாளையம் மகா சித்தி புத்தி விநாயகர் கோவிலில், அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் உருவப்படம் வைக்கப்பட்ட ரதத்துக்கு பூஜை செய்யப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட ரதம், சுப்பராயம்பாளையம், அண்ணா கிராமம், ராசிபாளையம், அருகம்பாளையம், மாதப்பூர், தொட்டிபாளையம் சோமனுார், கோதபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்றது. யாத்திரை சென்ற பகுதிகளில் உள்ள இளைஞர்கள், குழந்தைகள் ரதத்துக்கு வரவேற்பு அளித்து, விவேகானந்தர் உருவப்படத்துக்கு மலர் துாவி வணங்கினர். கருமத்தம்பட்டி நால்ரோட்டில் நடந்த வரவேற்பில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். கணியூர், தட்டாம்புதுார், செல்லப்பம்பாளையம், அரசூர் வழியாக தென்னம்பாளையத்தில் யாத்திரை நிறைவு பெற்றது.