திருப்புத்துார்: திருப்புத்துார் நகருக்கு 55 வது ஆண்டாக தைப்பூச வள்ளலார் பாதயாத்திரைக்குழுவினர் வருகை தந்தனர். கடந்த 55 ஆண்டுகளாக மதுரையிலிருந்து வடலுாருக்கு செல்லும் இக்குழுவில் 35 பேர் பங்கேற்றுள்ளனர். மதுரை செல்லத்தம்மன் கோயிலிலிருந்த துவங்கிய பாதயாத்திரை மேலுார், திருப்புத்துார், திருமயம், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, தஞ்சாவூர், கரந்தை, பாபனாசம், பின்னலுார் வள்ளலார் தங்கிய நந்தவனம், மருதுார் வழியாக 18 நாட்கள் கழித்து வடலுார் செல்கின்றனர். தினசரி 20 கி.மீ. செல்லும் இந்த யாத்திரைக்குழுவில் நடுத்தர வயதைத் தாண்டியவர்களே பங்கேற்கின்றனர். சாலைகளில் வள்ளலார் கொள்ககைளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கியவாறே செல்கின்றனர். வழியில் பாரம்பரியமாக தங்கும் இடங்களில் தங்கி, அங்கு வழங்கப்படும் உணவைசாப்பிடுவர். 20 ஆண்டுகளாகயாத்திரையில் பங்கேற்கும் ராமலிங்கம் கூறுகையில், தேனி முத்துச்சாமி துவக்கிய யாத்திரை தொடர்கிறது. 20 ஆண்டுகளாக செல்கிறேன். அரிய கருத்தை மக்களிடம் சேர்க்கும் மன திருப்திகிடைக்கிறது. உலக கவலைகளை மறந்து மன அமைதியுடன் வடலுார் அடைகிறோம் என்கிறார்.