பதிவு செய்த நாள்
20
ஜன
2018
12:01
கோத்தகிரி: கோத்தகிரி பெத்தளா கிராம இளைஞர்கள் மருத மலை முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர்.கோத்தகிரி பெத்தளா ஹெத்தையம்மன் பக்தர்கள் ஆண்டுதோறும் திருவிழா முடிந்தப்பின், காரமடை ரங்கநாதர் கோவிலுக்கு சென்று விரதத்தை முடிக்கி ன்றனர். அங்கு, ஊர் சார்பாக பூஜை நடத்தி, அங்கிருந்து மருதமலை முருகன் கோவிலுக்கு இளைஞர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் திருவிழா நிறைவடைந்த நிலையில், மறு அணா நிகழ்ச்சியை முடித்த பக்தர்கள், நேற்று காலை, பெத்தளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து, பாதயாத்திரை புறப்பட்டனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு தின்னியூர் கற்பக விநா யகர் கோவிலில், கிராம மக்கள் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு சிறப்பு பூஜையில் ஈடுபட்ட பக்தர்கள் பஜனையில் ஈடுபட்டு, விநாயகரை வழிபட்டனர். பக்தர்களை வழி அனுப்ப வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோவிலில் கலாசார நடனமாடி, பக்தர்களை வழியனுப்பி வைத்தனர். இதில், பெத்தளா கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.