பதிவு செய்த நாள்
20
ஜன
2018
01:01
குமாரபாளையம்: குமாரபாளையம், சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது. குமாரபாளையம், சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் ஜன(19) காலை துவங்கியது. மாலை, 4:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடங்கள் வரப்பட்டன. ஜன (20) இரவு, 7:00 மணிக்கு முதற் கால யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. ஜன (21)காலை, 7:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை நடக்கவுள்ளது. ஜன(22) காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெறுகிறது. பவானி, சங்கமேஸ்வரர் கோவில், மணிகண்ட சிவாச்சாரியார், யோகேஷ் ஐயர் உள்ளிட்ட குழுவினர் நடத்த உள்ளனர். காலை, 11:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.