ராசிபுரம்: தை வெள்ளியான ஜன(19), வெள்ளிக் கவச அலங்காரத்தில், நித்ய சுமங்கலி மாரியம்மன் அருள்பாலித்தார். தை மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமையும், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுபநிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடக்கும். முதல் வெள்ளி தொடங்கி, கடைசி வெள்ளியில் அம்மனை தரிசனம் செய்வது, கூடுதல் பலனைத் தரும் என, கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை, ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவிலில், வெள்ளி அபிஷேகம் நடந்தது. அம்மன் வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.