பதிவு செய்த நாள்
20
ஜன
2018
02:01
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், நொரச்சிவலவு, ஓம்காளியம்மன் திருவிழா, கடந்த, 3ல், அணையா தீபமேற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 15ல், சுவாமிக்கு கங்கணம் கட்டுதல், தேர் கலசம் ஏற்றுதல் நடந்தது. 17ல், சக்தி அழைத்து, அம்மனுக்கு எருமை கிடா பலியிட்டு, பெரும்பூஜை நடந்தது. நேற்று முன்தினம், மக்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலி கொடுத்து, சுவாமியை தரிசித்தனர். மாலை, 4:00 மணிக்கு, ஓம்காளியம்மன் தேரில் எழுந்தருளி, ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வந்தனர். இதையடுத்து, பக்தர்கள் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.