பதிவு செய்த நாள்
20
ஜன
2018
01:01
இடைப்பாடி: அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. இடைப்பாடி, சித்தூரில், அய்யனாரப்பன் கோவில் மராமத்து பணி முடிந்து, ஜன (21) கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி, பூலாம்பட்டி காவிரியாற் றிலிருந்து, வன்னிய நகர் வழியாக, அய்யனாரப்பன் கோவிலுக்கு, யானை, குதிரை, பசுக்களுடன், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று, புனிதநீர் தீர்த்தக்குடம் எடுத்துவந்தனர். தொடர்ந்து, மூன்று நாட்கள் நடக்கும் யாக சாலை பூஜை துவங்கியது.