அரசன் மலையத்துவஜன், காஞ்சனமாலை தம்பதிக்கு குழந்தை இல்லாததால் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தனர். அப்போது, பார்வதி மூன்று தனங்கள் உடைய பெண் குழந்தையாக தோன்றினாள். குழந்தையின் தோற்றம் கண்டு அரசன் வருந்த,“மணாள னைக் கண்டதும் தனம் மறையும்” என அசரீரி ஒலித்தது. பெற்றோர் குழந்தைக்கு “தடாதகை” என பெயரிட்டு வளர்த்தனர். பாண்டிய இளவரசியான இவள் மீன் போல கண்கள் கொண்டவள் என்பதால் மீனாட்சி எனப்பட்டாள். படைகளுடன் புறப்பட்ட அவள், எல்லா உலகங்களையும் வென்றாள். கைலாயம் சென்று, சிவனுடன் போரிட்ட போது தனம் மறைய, சிவனே மணாளன் என்பது புரிந்தது. மதுரையில் மீனாட்சி, சிவனுடன் மணக்கோலத்தில் காட்சி அளித்தாள். இங்கு வழிபட திருமண யோகம் வரும்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து 1 கி.மீ., தொடர்புக்கு: 0452 – 234 9868