செஞ்சி : செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு, பக்தர்கள் வரவேற்பளித்து தீபாரதனை நடத்தினார். கோவை வெள்ளியங்கிரி மலைச்சாரலில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலை முன்பு, மகா சிவராத்திரி தினத்தன்று இரவு சத்குரு தலைமையில் மாபெரும் தியான நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக கடந்த ஒரு ஆண்டாக ஆதியோகி சிவனுக்கு அணிவித்திருந்த ருத்ராட்சங்களை வழங்க உள்ளனர். இந்த விழாவை பிரபலப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதம் ஆதியோகி சிலை யாத்திரை நடந்து வருகிறது. இதன்படி கடந்த 20ம் தேதி, செஞ்சிக்கு வருகை தந்த ஆதியோகி சிலைக்கு, ஈஷா யோக மைய நிர்வாகிகளும், பொது மக்களும் வரவேற்பளித்து தீபாரதனை நடத்தினர். பின்னர் பீரங்கிமேடு, காந்தி பஜார் வழியாக மாரியம்மன் கோவில் வந்த ஆதியோகி சிலைக்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.