பதிவு செய்த நாள்
24
ஜன
2018
04:01
ஓமலூர்: தை வெள்ளியை முன்னிட்டு, லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஓமலூர், தர்மபுரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள, பெரிய மாரியம்மன் கோவிலில், தை வெள்ளியை முன்னிட்டு, நேற்று முன்தினம் முதல், லட்சார்ச்சனை விழா நடந்து வருகிறது. தினந்தோறும் மாலை, 6:00 மணிக்கு துவங்கி இரவு, 8:00 மணி வரை வரும், 26 வரை நடைபெறுகிறது. ஐந்து நாள் நடைபெறும் விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இறுதி நாளன்று, 108 சங்கு அபி ?ஷகம், சத்ரு சங்கார ?ஹாமம் நடைபெற உள்ளது.