சந்திர கிரகணம்: ஜன.31ல் திருச்செந்துார் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2018 01:01
துாத்துக்குடி: வரும் 31ம் தேதி தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படுவதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை காலங்கள் மாற்றப்பட்டுள்ளது.அன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படும். காலை 8:00 மணிக்கு சுவாமி அலைவாயு கந்தபெருமான் சப்பரத்தில் புறப்பாடாகி தைப்பூச மண்டபம் எழுந்தருளி, மாலை 4:00 மணிக்கு சுவாமி கோயிலை வந்தடைவார். மாலை 4:15 மணிக்கு சந்திர கிரகணத்தை முன்னிட்டு நடை திருக்காப்பிடப்படுகிறது. இரவு 9:30 மணிக்கு நடைதிறக்கப்படும்.