பதிவு செய்த நாள்
27
ஜன
2018
01:01
பழநியில் இருந்து முக்கிய இடங்களுக்கான துாரம்(கி.மீ.,): திருச்சி- 159, மதுரை- 114, கோயம்புத்துார் -105, கொடைக்கானல்- 64, ஈரோடு- 115, திண்டுக்கல் -65, திருப்பூர் -80. மேற்கண்ட இடங்களில் இருந்து அடிக்கடி பஸ் வசதியும் உண்டு.
சிறப்பு பஸ்கள்: தைப்பூசத்தை முன்னிட்டு, பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் வசதிக்காக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சி, கோயம்புத்துார், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
ரயில்கள் விபரம்: பழநி வழியாக தினசரி பாலக்காடு- -திருச்செந்துார், கோவை--மதுரை பயணிகள் ரயில், பாலக்காடு -- சென்னை, திருவனந்தபுரம்- -மதுரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பழநியில் இருந்து -மதுரைக்கு காலை 7:50, காலை 11:10 (திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ்), மாலை 4:45மணி, சென்னைக்கு மாலை 6:15 மணிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தைப்பூச சிறப்பு ரயில்கள்: மதுரை--- பழநி இடையே ஜன.30, 31ல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் மதுரையில் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு காலை 8:30மணிக்கும், மற்றொரு ரயில் பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு மாலை 4:45 மணிக்கு பழநியை வந்தடையும், பழநியில் காலை 11:30 மணிக்கு புறப்பட்டு பகல் 1:45 மணிக்கும், இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு மதுரைக்கு செல்கிறது.
வேலாயுத மூர்த்தி
பழநி மலையின் அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் திருவாவினன்குடி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வடகிழக்கு திசையில் சரவணப்பொய்கை தீர்த்தம் உள்ளது. பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் நீராடிய பின்னரே காவடி நேர்த்திக்கடனை செலுத்த புறப்பட வேண்டும் என்பது ஐதீகம். ஆவினன்குடி கோவிலில் மயில் மீது அமர்ந்த நிலையில் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். வேலாயுத மூர்த்தி என்னும் திருநாமத்துடன் விளங்கும் இத்தலமே திருமுருகாற்றுப்படையில் மூன்றாவது படை வீடாக குறிக்கப்பட்டுள்ளது. இங்கு முருகனைத் தரிசிக்க முனிவர்கள், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் அனைவரும் கூடி நின்றதாக நக்கீரர் குறிப்பிடுகிறார். நெல்லிவனம் என்னும் புராணப்பெயர் கொண்ட இக்கோவிலின் தலவிருட்சமாக நெல்லிமரமே இருக்கிறது. இங்கு தரிசித்த பின்னரே மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணியை தரிசிப்பது முறையாகும்.
இன்றைய நிகழ்ச்சி: தைப்பூசவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் காலை 8:45 மணிக்கு தந்தப்பல்லக்கில் சுவாமி உலா, இரவு 7:30 மணி, வெள்ளி காமதேனு வாகனத்தில் முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானை உலா.