பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
ப.வேலூர்: பரமத்தி, சவுராஷ்டிரா பஜனை மடத்தில், ரேணுகாதேவி அம்மனுக்கு நான்காமாண்டு திருவிழா நடந்தது. கடந்த, 22ல் கொடியேற்றம் நடந்தது. அன்று முதல் நேற்று வரை ஆஞ்சநேயர் கொடி மரத்துக்கு மாலை, 7:00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணியளவில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்று மாலை, 6:00 மணியளவில் ரேணுகாதேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. நள்ளிரவில் கும்ப பூஜை நடந்தது.