பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் நடக்கும் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் மார்ச் மாதம் வெகுவிமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா மார்ச், 1ல் நடக்கிறது. இதையொட்டி தேர்ப்பேட்டை சந்திரசூடேஸ்வரர் மண்டபம் முன், பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்கவுண்டர்கள், முக்கிய பிரமுகர்கள், தேர்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், பால்கம்பம் தேர்வீதியில் வலம் வந்து நடப்பட்டது. அதைத்தொடர்ந்து, பூசாரி வாசு தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தேர் கட்டும் பணி துவங்கியது. இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், ஓசூர் நகர தி.மு.க., செயலாளர் மாதேஸ்வரன், பா.ஜ., கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.