பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
குமாரபாளையம்: குமாரபாளையம், 24 மனை மாரியம்மனுக்கு முழு உருவ வெள்ளிக்கவசம் செய்யும் பணி, யாகத்துடன் துவங்கியது. குமாரபாளையம் தம்மண்ணன் வீதியில், 24 மனை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு, முழு உருவ வெள்ளிக்கவசம் செய்யும் பணி நேற்று சிறப்பு யாகத்துடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. கோவில் கமிட்டி தலைவர் ஜெகதீஸ், நிர்வாகிகள் சுப்பிரமணி, தண்டபாணி ஆகியோர், வெள்ளி கவசம் செய்யவிருக்கும் ஸ்தபதி கருணாமூர்த்தி வசம் ஒப்படைக்க, கவசம் செய்யும் பணிகள் துவங்கின.