விழுப்புரம்: கஞ்சனுாரில் அமைந்துள்ள ஸ்ரீ சவுந்தர்யநாயகி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் 73வது ஆண்டு தை சுக்கிரவார மகோற்சவம் நடந்தது. மகோற்சவத்தையொட்டி, நேற்று முன்தினம் காலை 10.00 மணிக்கு ராமலிங்கேஸ்வர சுவாமிக்கு மகாபிஷேகம், மாலை 4.00 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, 6.00 மணிக்கு தேவார இன்னிசை, இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாணம், 8.00 மணிக்கு சவுந்தர்நாயகி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கஞ்சனுார் கிராம மக்கள் செய்திருந்தனர்.