பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
கோத்தகிரி : கோத்தகிரி சக்கத்தா முருகன் பக்தர்கள், 45வது ஆண்டாக, பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். பக்தர்களை பஜனை ஆடல் பாடலுடன், உறவினர்கள் வழியனுப்பி வைத்தனர். கோத்தகிரி சக்கத்தா கிராமத்தில் ஆண்டாள் பஜனை சபா செயல்பட்டு வருகிறது. இந்த சபா, 45 ஆண்டுகளுக்கு முன், மறைந்த ஊர் தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் நிறுவப்பட்டு, சிறப்பாக இயங்கிவருகிறது.
பஜனை சபா சார்பில், ஆண்டுதோறும் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். நடப்பாண்டு, சக்கத்தா முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி, 250க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கிருந்து, பழநி முருகன் கோவிலுக்கு நேற்று பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை பக்தர்களுக்கு, மாரியம்மன் கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது. பஜனை, ஆடல் பாடலுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பக்தர்களை வழியனுப்பி வைத்தனர். கோத்தகிரி சக்கத்தா கிராமத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்கள், மேட்டுப்பாளையம், காரமடை, ஒத்தக்கால் மண்டபம், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வழியாக, பழநி முருகன் கோவிலை அடைய உள்ளனர்.