உத்தரகோசமங்கை கோயிலில் நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 12:01
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள மூலவர்கள் அறுபத்தி 3நாயன்மார்களுக்குசிறப்பு பூஜைகள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியாசிரியர்கள், மாணவர்கள் சார்பில் தேவாரம், திருவாசகப்பாடல்கள் பாடப்பட்டது. மங்களநாதர் சன்னதி முன்பு இசைப்பள்ளி மாணவியர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.இசைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ் சிவன் தலைமை வகித்தார். பேஷ்கார் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் லட்சுமணன், சுமதி, பவானி, தவில் ஆசிரியர் சந்திரசேகரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மதுரை திருநாவுக்கரசர் இசை அறக்கட்டளை சிவனடியார்கள் செய்திருந்தனர்.