திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்குகாட்சியளித்தார். மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்த அபிேஷகங்கள் நடந்தன. காளை வாகனத்தில் ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் வீதி உலா நடந்தது. பக்தர்கள் தேவாரம், திருவாசக பாடல்களை பாடினர். பின்பு பிரசாதம் வழங்கபட்டது. ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.