மாசி சிவராத்திரி : ராமேஸ்வரம் கோயிலில் பிப்.,6ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2018 12:01
ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,6ல் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது. ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி, ஆடித்திருக்கல்யாணம் விழா முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பிப்.,6ல், கோயிலில் கொடி ஏற்றப்பட உள்ளது. மாசி சிவராத்திரி விழாவான பிப்.13ல் சுவாமி சன்னதியில் புனித கங்கை நீரில் புனித அபிேஷகம், அன்று இரவு அலங்கார வெள்ளி ரதம் புறப்பாடும், பிப்.,14ல் கோயிலில் மாசி தேரோட்டம் வீதி உலா நடக்கும். மாசி அமாவாசையான பிப்.,15ல் சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி செய்து வருகிறார்.