ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பர் கோயிலில், தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபாடு செய்தனர். பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்ள, பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வர். அவ்வாறு செல்லும் பக்தர்கள், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள குழந்தை வேலப்பரை தவறாமல் வழிபட்டு செல்வர். அங்கு குழந்தை வடிவில் வீற்றிருக்கும் வேலப்பருக்கு தாங்கள் நினைத்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என மிட்டாய் வைத்து வழிபாடு செய்வர். இதேபோல் இங்குள்ள மரத்தில் துணிகளில் தொட்டில் கட்டி தொங்கவிடுவர். பக்தர்களது கோரிக்கை நிறைவேறியவுடன் மிட்டாய் உள்ளிட்ட குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருட்களை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.