பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
பழநி;பழநி தைசப்பூச விழாற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக மலை வாழைப்பழங்கள் ’டன்’ கணக்கில் குவிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குழுவினராக வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்கு மலை வாழைப்பழம், கற்பூரவள்ளி வாழைப்பழங்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் இவ்வாண்டு கர்நாடக மாநிலம் குடகு மலைப்பழம், பாச்சலுார், சிறுமலை, பன்றிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து மலைவாழை பழங்கள் ’டன்’ கணக்கில் வந்து குவிந்துள்ளன. கடந்த ஆண்டு வரத்துஅதிகரிப்பு காரணமாக ஒருபழம் ரூ.4 முதல் ரூ.6 வரை விற்றது, இவ்வாண்டு வரத்து குறைந்து ரூ.5முதல் ரூ.8 வரை விற்கிறது.
40 டன்தான் வந்துள்ளது: பழவியாபாரி முத்துச்சாமி கூறியதாவது: பழநி வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயார் செய்ய தாண்டிக்குடி, சிறுமலை, பாச்சலுார், குடகு பகுதிகளில் இருந்து மலை வாழைப் பழங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு 60டன் வரை வாழைப்பழங்கள் வந்தது. இந்தாண்டு மொத்தம் 40டன் தான் வந்துள்ளது. குடகுமலைப்பழம் ரூ.5 முதல் ரூ.6க்கும், சிறுமலைப்பழம் ரூ.6 ரூ.8 வரையும் விற்கிறோம்” என்றனர்.