பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
மாங்காடு: மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா இன்று துவங்குகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அடுத்த மாங்காடு பகுதியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோவில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோவில்கள் உள்ளன.அம்மனின், 51 சக்தி பீடங்களில், காமகோடி சக்தி பீடமாக காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் அம்மனுக்கு முன் உள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள் இங்கு அம்மனை வழிபடுகின்றனர்.இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்பத்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதி களை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்:
இன்று:- மாலை,6:30: வெள்ளீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளல் இரவு, 7:30: காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல்
இரவு, 8:30: யானை வாகனத்தில், காமாட்சி அம்மன் திருவீதி உலா
நாளை:- இரவு,10:00 - காமாட்சி அம்மன் கிளி வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளல் மற்றும் திருவீதி உலா. (சந்திரகிரஹணம் என்பதால், பகல், 1:00
மணி முதல் இரவு, 10:00 மணி வரை நடை சாற்றப்படும்)
பிப்.,1- மாலை,6:30- வைகுண்டப்பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளல் இரவு, 7:30- காமாட்சி அம்மன் தெப்பத்தில் எழுந்தருளல்
இரவு, 8:30- அன்ன வாகனத்தில், காமாட்சி அம்மன் திருவீதி உலா.