பதிவு செய்த நாள்
30
ஜன
2018
12:01
வீரபாண்டி: பிச்சம்பாளையம் முனியப்பன், பெரியாண்டவர் கோவில் கும்பாபி?ஷக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். வீரபாண்டி, இனாம்பைரோஜி பிச்சம்பாளையம் திருமணி முத்தாற்றின் கரையில் உள்ள, கோமுட்டி முனியப்பன் மற்றும் பெரியாண்டவர் கோவில்களின் கும்பாபி?ஷக விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாரியம்மன் கோவிலில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். நேற்று காலை, சுவாமி சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டு, விநாயகர் பூஜை, நான்கு கால யாக பூஜைகள் முடிந்து காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் புனிதநீர் கலசங்களை ஊர் பெரியவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர், கோவிலை வலம் வந்து முனியப்பன், பெரியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். அனைத்து சுவாமிகளுக்கும் புது வேட்டி, பரிவட்டம் கட்டப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.