பதிவு செய்த நாள்
31
ஜன
2018
02:01
சேலம்: சேலம், அம்மாபேட்டை, புகையிலை மண்டியில் உள்ள, நாகதேவதை, நாகராஜ கணபதி கோவிலில், தைத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று காலை, 201 பெண்கள், பால்குடங்கள் எடுத்துக்கொண்டு, செங்குந்தர் சுப்ரமணியர் கோவிலில் இருந்து, ஊர்வலம் புறப்பட்டனர். அவர்கள், மேட்டுத்தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, விவேகானந்தர் தெரு வழியாக, நாக தேவதை கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு பால் அபி?ஷகம் செய்யப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.