பதிவு செய்த நாள்
01
பிப்
2018
01:02
பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயில் உட்பிரகாரம் 3,000 கிலோ பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு, பழநி புஷ்ப கைங்கர்யா சபா சார்பில், மலைக்கோயில் உட்பிரகாரம் பாரவேல் மண்டபம் பலவண்ண ரோஜாக்கள், பூங்கொத்துகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து ஜருபுரா, பல வண்ணங்களில் ரோஜா பூக்கள், பூங்கொத்துகள் வரவழைக்கப்பட்டன. இவற்றுடன் செவ்வந்தி, மல்லிகைப் பூக்களால் மலைக்கோயில் உட்பிரகாரத்தில் வேல், ஓம் சரவணபவ, மயில் போன்ற ரங்கோலிகள் வரையப்பட்டிருந்தன. பழநி புஷ்ப கைங்கர்யா சபா தலைவர் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, நிர்வாகிகள் ஆடிட்டர் நடராஜன், மருதுசாமி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.