ஒட்டன்சத்திரம், சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக்குழு சார்பில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே பழநி முருகன் அன்னதான குடில் அமைத்து, பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் ஆண்டு தோறும், பழநி முருகன் அன்னதான குடில் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்தாண்டும் தைப்பூச விழாவை முன்னிட்டு, அதிக ஆண்டுகள் பாதயாத்திரை செல்வோரை கண்டறிந்து கவுரவிக்கும் வகையில், அவர்களைக் கொண்டே அன்னதானம் தொடங்கி வைக்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு பஜனை, மேளதாளங்கள் நடந்தன. மகா வேலுக்கு இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் கொண்டு அபிேஷகம் நடந்தது. உறுப்பினர்களுக்கு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டது.