சந்திரகிரகணம் எதிரொலி தைப்பூசம் அன்று வெறிச்சோடிய பழநி கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2018 03:02
பழநி, நேற்று சந்திரகிரகணம் காரணமாக, பழநி முருகன்கோயில் மாலை 4:00 மணிக்கு நடைசாத்தப்பட்டதால், வெளிப்பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது. தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. சந்திரகிரகணம் காரணமாக, நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய காத்திருந்து, பகல் 12:00 மணிவரை குடமுழுக்கு நினைவரங்கம் வரை அனுமதிக்கப்பட்ட பகல் 2:25மணிவரை பக்தர்கள் சுவாமிதரிசனம் செய்தனர். அதன்பின் பகல் 2:45மணிக்கு சாயரட்சை பூஜை முடித்து, பகல் 3:45மணிக்கு நடைச்சாத்தப்பட்டது.இதனால் வழக்கமாக எப்போதும் பக்தர்கள் கூட்டம் காணப்படும் வெளிப்பிரகாரம் வெறிச்சோடிகாணப்பட்டது. இரவு 9:00மணிக்கு சம்ரோக்சன பூஜையும், தொடர்ந்து அர்த்தஜாம பூஜையுடன் சன்னதி திருக்காப்பிடப்பட்டது. இன்று அதிகாலை 4:00மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடக்கிறது.