பதிவு செய்த நாள்
01
பிப்
2018
03:02
தேனி, மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் தைப் பூசத்தை யொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகம், தீபா ராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்செய்தனர். தேனி - பெரியகுளம் ரோட்டில் உள்ள வேல் முருகன் கோயில், கணேச கந்தபெருமாள் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.கோடாங்கிப்பட்டி தீர்த்த தொட்டி ஆறுமுக நயினார் கோயிலில் சுவாமி ராஜஅலங்காரத்தில் காட்சியளித்தார். சந்திர கிரகணத்தையொட்டி மாலையில் கோயில்கள் நடை அடைக்கப்பட்டது.
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சுவாமி வள்ளி,தெய்வானையுடன்ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். * போடி பரமசிவன் மலைக்கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பழநிமலை சுருளி மலை பாதயாத்திரை குழுவைச் சேர்ந்த பெண்கள், பஜனைப் பாடல்கள் பாடினர். சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
*லோயர்கேம்ப் அருகே குமுளி மலைப்பாதையில் உள்ள வழிவிடும் முருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்தனர். பால் அபிசேகம் , தீபாராதனை நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உட்பட பலவிதமான பொருட்களால்அபிேஷகம் செய்யப்பட்டது. சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சியளித்தார். சன்னதியில் திருமணம் நடந்தது.
*வடுகபட்டி வள்ளலார் நகரில் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞானசபையில், தைப்பூசஜோதி தரிசனப் பெருநாள்விழா நடந்தது. அகவல் பாராயணம் பாடப்பட்டது. பேராசிரியை தமிழ்ச்செல்வி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து ஜோதி வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் சேவா அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.
உத்தமபாளையம் ராயப்பன்பட்டி மலையடிவாரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சண்முகநாதன் கோயிலுக்கு தைப்பூசதிருவிழாவையொட்டி நேற்று ஒரு நாள்மட்டும் பக்தர்கள் வாகனங்களில் செல்ல உத்தமபாளையம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விழாக்குழுவினர் இடைக்கால
உத்தரவு பெற்றனர். அந்த அனுமதியை அடுத்து காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். சண்முகநாதன் அலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு அபிேஷக, தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரச்னையை தவிர்க்க போலீசார், குவிக்கப்பட்டிருந்தனர். கம்பம் கிழக்கு ரேஞ்சர் தினேஷ் தலைமையில் வனத்துறையினர் முகாமிட்டிருந்தனர்.
*உத்தமபாளையம், காளாத்தீஸ்வரர், கம்பம் வேலப்பர்,கம்பராயப்பெருமாள் கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. மூணாறு: மூணாறில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பழநி பாதியாத்திரை குழுக்கள் சார்பில், தைப்பூசத் திருவிழா நடந்தது. காலை 8:00மணியளவில்பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு, முருகன் மற்றும் வள்ளி,தெய்வானைக்கு அபி ேஷகம்நடந்தது. காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. அரோகரா கோஷங்கள் முழங்க பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பழைய மூணாறு பார்வதியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பிய தேர், நகர் வலம் வந்த பிறகு நிலைக்கு திரும்பியது. அதனுடன் சென்ற மேளங்கள், கொடி அணி வகுப்பு, கிராமிய நடனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்.
நடை அடைப்பு: தேர் பவனிக்காககாலை 9:00மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மதியம் 2:30மணிக்கு திறக்கப்பட்டது. சந்திர கிரகணத்தையொட்டி மதியம் 3.:30மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்பட்டது. கிரகணம் முடிந்த பிறகு இரவு 9:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுத்தி கலச பூஜை நடந்தது.