மானாமதுரை: மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழாவை முன்னிட்டு சிறப்புபூஜைகளும், அபிேஷக ஆராதனைகளும் நடைபெற்றன.வழிவிடுமுருகன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும்,அபிேஷகங்களும்,ஆராதனைகளும் நடைபெற்றன. வள்ளி,தெய்வானையுடன் மயில்வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்தார்.ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் விநாயகர் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில்சிறப்பு அபிேஷக ஆராதனைகளும்,பூஜைகளும் நடைபெற்றது. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, இடைக்காட்டூர் முருகன் கோயில்களிலும்சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.