பதிவு செய்த நாள்
02
பிப்
2018
01:02
கோத்தகிரி;ஊட்டி தாலுகா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, பிக்கமரஹட்டி விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் கும்பாபிேஷகம் மற்றும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, 7:35 மணிமுதல், 9:00 மணிவரை கிராம பொதுமக்கள் முன்னிலையில், மகா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, ஐயனை அலங்கரித்து, தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. காலை, 11:00 மணிக்கு ெஹத்தையம்மன் அழைப்பும், தொடர்ந்து, பஜனை ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பகல், 2:00 மணிக்கு அன்னதானம், 4:30 மணிமுதல், 6:00 மணிவரை ஆடல் பாடல், இரவு, 10:00 மணிமுதல், 11:00 மணிவரை மகாதீபாராதனை தொடர்ந்து, காலை, 6:00 மணிவரை பஜனை இடம் பெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அபிேஷக பூஜை, ஐயனை அலங்கரிக்கும் நிகழ்ச்சியை ஒட்டி, முடிக்காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, பிக்கமரஹட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.