பதிவு செய்த நாள்
06
பிப்
2018
01:02
நாமக்கல்: நாமக்கல், சக்தி விநாயகர் கோவில், 25ம் ஆண்டு விழா நடந்தது. நாமக்கல், ஏ.எஸ்., பேட்டை, சக்தி விநாயகர் கோவில், 25 ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபி?ஷகம் வேள்வி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.