ப.வேலூர்: பொத்தனூர் சக்தி விநாயகர் கோவிலில், திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. ப.வேலூர் அடுத்த, பொத்தனூர் சக்திவிநாயகர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 9:00 முதல், மாலை, 6:30 மணிவரை விரதமிருந்து, திருவாசகத்தை சிவனடியார்கள் வாசிக்க, பக்தர்களும் பின் தொடர்ந்து வாசித்தனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிறன்று, திருவாசகம் முற்றோதுதல் நடைபெறவுள்ளது.