பீஷ்மரே! பத்து நாட்களாக குருக்ஷேத்திரத்தில் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாளில் பாண்டவர்களை அழிப்பீர்கள்? துரியோதனன் அதிகாரமாகக் கேட்டான். நாள் கணக்கெல்லாம் எதற்கு? ஒரே நொடியில் கொன்றுவிடுவேன்... ஆனால்! ஆனால் என்ற சொல் வந்துவிட்டாலே ஒரு காரியம் தோற்றுப்போகும். முடியும், முடியாது என்பதே வெற்றிக்குரிய வார்த்தைகள். நீங்களோ ஆனால்...என இழுக்கிறீர்கள்! அவர்களைக் கொல்ல உங்களைத் தடுக்கும் சக்தி எது? பீஷ்மர் தயக்கமின்றி சொன்னார். அந்த மாயக்கிருஷ்ணன் தான். அவனை பிரித்துவிட்டால் ஒரே நொடியில் தீர்த்துக்கட்டி விடுவேன்,. துரியோதனனுக்கு அதற்குப்பிறகும் பேச வாய் வருமா என்ன! அவன் எழுந்து போய்விட்டான். பாண்டவர்கள் கிருஷ்ணனை மனதார துதித்தார்கள்.அவர்களது மனைவி பாஞ்சாலியும் துன்பம் வந்தால் கண்ணா என்று தான் அழைப்பாள். அவன் புடவையுடன் வந்துநிற்பான். அவர்களது அன்னை குந்திதேவி, கர்ணனை நினைத்து கவலைப்பட்ட போது ஆறுதலளித்தவனும் அவனே! கண்ணனை நம்பினோர் கைவிடப்படார்.